News October 31, 2025
நயினாருடன் அதிமுகவினர் ஆலோசனை

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.
Similar News
News October 31, 2025
இது என்ன ஊரு? வினோதமா இருக்கே

போலந்து நாட்டில் உள்ள சுவோசோவா என்று ஊரில், 6 ஆயிரம் குடும்பங்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். இந்த தெரு சுமார் 9 கி.மீ தூரம் கொண்டது. ‘ஒரே தெரு’ என்ற வடிவமைப்பில் இந்த ஊர் பிரபலமாகி உள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு, இயற்கை சூழல், விவசாயத்துடன் இணைந்த வாழ்க்கை மூலம் அழகான சிறிய ஊர் என்பதைக் காட்டுகிறது. இதன் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News October 31, 2025
அதிமுக தலைவர்கள் என்னை திட்டுகின்றனர்: அண்ணாமலை

அமித்ஷாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அதிமுகவை பற்றி பேசாமல் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். OPS, TTV, KAS இணைப்பானது அதுவாக நடந்ததாகவும், அதற்கு தான் பொறுப்பில்லை என்ற போதிலும் தன்னைக் காரணமாக குறிப்பிடுகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். அதிமுக தலைவர்கள் தன்னை இன்றும் திட்டிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் குறித்து திரும்ப பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது என்றும் வினவியுள்ளார்.
News October 31, 2025
நாடு முழுவதும் விலை குறைந்தது.. அதிரடி ஆஃபர்

நாடு முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ரீசார்ஜில் 5% தள்ளுபடி வழங்கும் பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹485 திட்டம் இனி ₹460-க்கு கிடைக்கும். இதில், 72 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS ஆகியவற்றை பெறலாம். இதேபோல், ₹1,999 ரிசார்ஜ் பிளானிலும் ₹100 தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


