News January 7, 2026

நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

image

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 26, 2026

சற்றுமுன்: ‘ஜன நாயகன்’ படம்.. புதிய அப்டேட் வெளியானது

image

விஜய்யின் ‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கில் நாளை தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் EXCLUSIVE தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய்யும், H.வினோத்தும் கேட்டுக் கொண்டதால், ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். அவர் எந்த மாதிரியான கேரக்டரில் நடத்திருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

News January 26, 2026

டிராபிக்கால் 12 மணி நேர வேலை.. நொந்துபோன ஊழியர்

image

பெங்களூருவின் மோசமான டிராபிக் காரணமாக தினசரி அலுவலகத்திற்கு செல்ல 2 – 3 மணி நேரம் ஆவதாக அங்கு வேலை செய்யும் ஐடி ஊழியர் ஒருவர் SM-ல் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பயண நேரத்தையும் சேர்த்தால், 9-5 என்பது 9-9 ஆக மாறிவிடுகிறது என்றும், வாழ்க்கையின் பொன்னான நேரத்தை ஆடுகளைப் போல கூட்டமாக அலுவலகங்களுக்குச் செல்வதிலேயே செலவிடுகிறோம் எனவும் கூறியுள்ளார். உங்கள் சிட்டியில் டிராபிக் எப்படி உள்ளது?

News January 26, 2026

10 ஆண்டுகளாக வன்கொடுமை.. நடிகர் கைது

image

வீட்டில் வேலை செய்த பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலிவுட் நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டாலும், திருமணம் செய்து கொள்வார் என நம்பிக்கையில், இதுகுறித்து பொதுவெளியில் பேசவில்லை என அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நதீம் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!