News December 31, 2025
நயன்தாராவின் கில்லர் லுக்!

யஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலிஷாக கேசினோ நுழைவாயிலில் நிற்கும் நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயர் ’கங்கா’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு யஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் டாக்ஸிக் மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
Similar News
News January 28, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. வந்தது HAPPY NEWS

குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இது, ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவை விஞ்சும் வகையில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்த திமுக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
News January 28, 2026
ரேஷன் கடை திறந்திருக்கா? ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம்

ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் கடை மூடியிருக்கும், பல நேரங்களில் கேட்கும் பொருள் இல்லை என்பார்கள். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க, ஒரு SMS போதும்! ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணில் இருந்து 89399 22990 or 97739 04050 எண்களுக்கு PDS 101(என்ன பொருள்கள் உள்ளது என அறிய), PDS 102 (கடை உள்ளதா என அறிய) என மெசேஜ் அனுப்பினால், தமிழிலேயே தகவல்கள் கிடைத்துவிடும். அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக

அதிமுக கூட்டணியில் அன்புமணியும், திமுக கூட்டணியில் விசிகவும் ராமதாஸ் தரப்பை இணைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே, தவெக தரப்பில் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை ராமதாஸ் தரப்பு உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக நிர்வாகி கூறியுள்ளார்.


