News January 6, 2025
‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி

ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள டெக்ஸ்வேலியில் விழாக்காலங்களில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி, 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உரி அடித்தல், சிலம்பாட்டம், கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இலவச அனுமதியுடன் நடைபெற உள்ளது.
Similar News
News February 1, 2026
சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

ஈரோடு இரவு ரோந்து போலீசார் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.