News May 9, 2024

நம்மை காக்கும் திட்டத்தில் 2438 நோயாளிகள் பயன்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து 4 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனையில் 2438 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.98 லட்சத்து 10 ஆயிரத்து 825 செலுத்தப்பட்டதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் 2/2

image

திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (19.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News November 19, 2024

இன்றைய ரோந்து பணி காவலர்களின் விவரம் 2/2 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், காவலூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (19.08.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.

News November 19, 2024

பெரிய கண்ணாலம்பட்டி பள்ளியில் கலெக்டர் ஆய்வு

image

திருப்பத்தூர் அடுத்த பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நூலகம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் மதிய உணவின் தரம் குறித்து இன்று (நவ.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.