News April 7, 2024
நம்மாழ்வார் பிறந்த நாள் கொண்டாட்டம்

பெரியகண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 86-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு டெல்டா இயற்கை விவசாயி பிரபு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணி, சேகல் இயற்கை விவசாயி இளஞ்செழியன் ஆகியோர் நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன.
Similar News
News April 6, 2026
நாகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

நாகை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.