News December 29, 2025
நம்பியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

நம்பியூர் அருகே சாணார்புதூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகேஸ்வரன் 21. கொன்னமடை பகுதியில் வசித்தார். சொந்த வேலை காரணமாக நம்பியூர் சென்றவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது நம்பியூர் -கோபி மெயின் ரோடு பகுதியில் எதிரே அதிவேகமாக வந்த மினி டெம்போ மோதியதில் மகேஸ்வரன் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
பயத்தில் சத்தியமங்கலம் மக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் சாலையில் சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது. வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
News December 31, 2025
ஈரோடு: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News December 31, 2025
ஈரோடு: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0424-2210898 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)


