News March 30, 2025

நம்பியூரில் பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பலி

image

நம்பியூர் அருகே உள்ள அப்பியபாளையத்தைச் சேர்ந்த, பள்ளி மாணவன் ரோஹித் (13). இந்த மாணவர் தனது நண்பர்களான சதீஷ்குமார், ரித்தீஷ், ஹரி சுதன், மூவருடன் சேர்ந்து, அருகில் உள்ள குளத்திற்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கால் தவறி குளத்துக்குள் விழுந்து விட்டனர். அருகில் இருந்து ஆடு மேய்த்த பெண் ஒருவர் மூன்று பேரை துண்டு போட்டு காப்பாற்றினார். ரோகித் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Similar News

News April 1, 2025

அந்தியூர் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

image

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.

News April 1, 2025

ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

image

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 1, 2025

பண்ணாரி திருவிழா: போக்குவரத்து மாற்றம்

image

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திம்பம் ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் வாகனங்கள் டிஜி புதூர் 4ரோடு கடம்பூர் வழியாக செல்ல வேண்டும். கர்நாடக மாநிலத்திலிருந்து திம்பம் வழியாக ஈரோடு செல்லும் வாகனங்கள் ஆசனூர், கடம்பூர், டி.ஜி.புதூர் வழியாக செல்ல வேண்டும். வரும்6ம் தேதி முதல் 8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!