News November 24, 2025

நம்பித்தானே கொடுத்தேன்: கோபமான தோனி

image

2019 IPL-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவர் CSK வீரர் தீபக் சாஹரிடம் கொடுக்கப்பட்டது. முதல் 2 பந்துகள் no ball ஆனது. இதனால், ‘நீ முட்டாள் இல்லை, நான் தான் முட்டாள், உன்னை நம்பித்தானே பந்தை கொடுத்தேன்’ என்று தோனி திட்டியதாக சாஹர் நினைவுகூர்ந்துள்ளார். இதனையடுத்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்த சாஹர், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் CSK-வும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 24, 2025

நிரந்தர டிஜிபி நியமனத்தில் தடுமாற்றம் ஏன்? EPS

image

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபியை தேர்வு செய்யாதது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசே டிஜிபி பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வழக்கு தொடர்ந்த பிறகே பட்டியலை TN அரசு தயாரித்ததாக விமர்சித்துள்ளார். தேர்வு பட்டியலில் உள்ள 3 பேரும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படமாட்டார்கள் என்பதாலே இன்னும் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 24, 2025

தர்மேந்திரா காலமானார்.. PM மோடி உருக்கமான இரங்கல்

image

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான <<18375107>>தர்மேந்திரா<<>> உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு பாலிவுட் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மேந்திரா தனது மாறுபட்ட நடிப்பால் எண்ணற்ற மக்களை கவர்ந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

News November 24, 2025

பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

image

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் நன்மை உள்ள நிலையில், பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா? *வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் *ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது *உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது *ரத்த ஓட்டம் சீராகும் *பற்கள் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது *ஆன்டி-ஆக்ஸிடண்ட் கண்புரை நோய்களுக்கு உதவுகிறது.

error: Content is protected !!