News January 15, 2026

நம்பர் 1-ல் சிங்கப்பூர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

image

2026-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளன. பட்டியலில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ல் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 5 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், தற்போது இந்தியர்கள் 55 நாடுகளுக்கு  விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 12, 2026

எகிப்து பிரமிட்டில் தமிழர் பெயர்: தங்கம் தென்னரசு

image

எகிப்து பிரமிடுகளில் ’தமிழ்-பிராமி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது குறித்து தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘சிகை கொற்றன்’ என்ற பெயர் 5 பிரமிடுகளில் 8 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்க சொல்வதுபோல் இது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

₹10 மனிதநேய மருத்துவர் காலமானார்.. குவியும் அஞ்சலி

image

45 ஆண்டுகளுக்கும் மேலாக ₹10 மட்டும் வாங்கிக் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை பார்த்து வந்த டாக்டர் பொன்னையா(90) காலமானார். திருச்செந்தூரில் உள்ள கிளினிக்கில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொரோனா, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இவரது சேவையால் தாங்கள் மிகவும் பயனடைந்ததாகவும் அவர்கள் உருக்கமுடன் தெரிவிக்கின்றனர்.

News February 12, 2026

மீண்டும் ராமதாஸ் உடன் சேர்வீர்களா? அன்புமணி பதில்

image

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ள நிலையில், ராமதாஸை NDA-வில் சேர்க்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை விதித்துள்ளாராம். இருப்பினும், ராமதாஸ் – அன்புமணி இருவரையும் NDA கூட்டணியில் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக தகவல் கசிந்தது. இந்நிலையில், ராமதாஸுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது முடிந்துபோன கதை என கூறிய அன்புமணி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!