News October 24, 2024
நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

மலேசியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் படுத்த படுக்கையானார். மனம் தளராத அவரது மனைவி 6 ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். அண்மையில் உடல்நலம் தேறிய கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துள்ளார். அந்த பெண்ணோ, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என கணவனை வாழ்த்தினாலும், ‘நன்றி கெட்டவன்’ என அந்நபரை நெட்டிசன்கள் திட்டுகின்றனர்.
Similar News
News January 29, 2026
ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.
News January 29, 2026
சென்சார் விதிகளை பின்பற்ற வேண்டும்: சவுந்தர்யா ரஜினி

தணிக்கை வாரியம் இன்றோ, நேற்றோ புதிதாக உதயமான அமைப்பல்ல. அது மதிக்கப்பட வேண்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்,ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அந்த தணிக்கை வாரியமே முடிவு செய்கிறது என்றும், இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் வழக்கம் எனவும் பேசியுள்ளார்.
News January 29, 2026
டைப்-2 நீரிழிவு நோயா? இந்த பழங்களை தொட்றாதீங்க!

நீரழிவு நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிக அவசியம். அதன்படி, வாழைப்பழத்தில் ஃபிரக்டோஸ் & சுக்ரோஸ் இருப்பதால், அதனை வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் சாப்பிடக் கூடாது. சப்போட்டா, மாம்பழம் & சீத்தாப்பழத்தில் அதிகப்படியான சர்க்கரைச் சத்து, உயர் கிளைசெமிக் குறியீடு (GI) மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ளது. எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


