News August 8, 2024
நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணி நிரப்பப்பட உள்ளது. chengalpattu.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆக.22ஆம் தேதிக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
செங்கல்பட்டு: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

செங்கல்பட்டு மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
செங்கல்பட்டு: நடுபழநியை பற்றி உங்களுக்கு தெரியுமா?

செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் பெருக்கரணையில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


