News October 8, 2024

நத்தம் வரி திட்ட பணிகள் மூலம் பட்டா: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலகரம் கிராமத்தில் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ரயத்து மனை பட்டா பெறுவதற்கு நில உரிமையாளர்கள் நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும்போது உடனிருந்து அவரவர் இடங்களை காண்பிக்க வேண்டும். பத்திரப்பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய அலுவலர்களால் புலப்பரிசீலனை மேற்கொண்டு பட்டா வழங்கப்படும் என்றார்.

Similar News

News November 20, 2024

குண்டாறு அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை!

image

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.,19) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக, செங்கோட்டையில் உள்ள குண்டார் அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 7 மி.மீட்டர் மழையும், கருப்பா நதியில் 9 மி.மீட்டர், ராமநதியில் 12 மில்லி மீட்டர், கடனா அணையில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும்!

image

தென்காசி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.

News November 20, 2024

தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

கனமழை எதிரொலியாக தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.