News December 7, 2025
நத்தம் அருகே வாலிபர் கொடூரமாக கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள பாலத்தில் உட்கார்ந்து இருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீரமைப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரியின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வரும் டிச.31க்குள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கவும்.SHAREit
News December 11, 2025
திண்டுக்கல்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News December 11, 2025
வேடசந்தூர் போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன்மகன் இளையராஜா என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா்அவரைக்கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செயதனர்


