News February 23, 2026

நண்பனுக்கு உதவச்சென்று ₹7 கோடி மோசடியில் சிக்கிய நபர்!

image

பெங்களூருவில் கெஞ்சி உதவிக்கேட்ட நண்பனுக்காக தனது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒருவர் வழங்கியுள்ளார். ஆனால் அடுத்த சில நாள்களில் ₹7 கோடி ஆன்லைன் மோசடிக்காக அவரது வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவரது வீட்டுக்கு தபால் சென்றது. அதில் ஷாக் ஆன அவர் தற்போது சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளார். இப்படி செய்தால் யாரைதான் நம்புவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News

News February 24, 2026

FLASH: தங்கம் விலையில் மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $122 (இந்திய மதிப்பில் ₹11,100) உயர்ந்து $5,227 ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி 1 அவுன்ஸ் $3 (₹272) உயர்ந்து $87-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக உயரும். கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,520 உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

News February 24, 2026

விஜய் கொள்ளையடித்த பணத்தை.. RS பாரதி

image

கொள்ளையடித்த பணத்தை பங்கீடு செய்வதால் திமுக கூட்டணி ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சென்னை HC-ஆல் ஒன்றரை ₹1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நபர் தங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதாக RS பாரதி பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யை முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வரச் சொல்லுங்கள் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

News February 24, 2026

வங்கிகளை எச்சரித்த நிர்மலா சீதாராமன்

image

காப்பீடு விற்பனை செய்வதை வங்கிகள் நிறுத்த வேண்டும் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் காப்பீடுகளை திணிப்பதை தவிர்த்து, தங்களது முக்கிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அழுத்தமாக தெரிவித்தார். மேலும், வங்கிசாரா தயாரிப்புகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிட்டுள்ளார். இனி வங்கிகள் காப்பீடு வாங்க வேண்டும் என்று உங்களை கட்டாயப்படுத்த முடியாது.

error: Content is protected !!