News May 1, 2024
நடுரோட்டில் தீ பற்றி எரிந்த கார்

திருத்தணி மிட்டக்கண்டிகையைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் தனது உறவினர் ராமதாஸ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரக்கோணம் காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூர் பருவமேடு அருகே இன்று மாலை செல்லும் போது காரில் இருந்து புகை வந்ததால் இருவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நொடிகளில் கார் தீ பற்றி எரிந்தது.
Similar News
News November 6, 2025
தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்
News November 6, 2025
தீவிர திருத்த கணக்கு சீட்டு வழங்கிய ஆட்சியர் சந்திரகலா

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.5) ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகராட்சி தனியார் மஹால் தெருவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை பார்வையிட்டார்கள். உடன் வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆணையாளர் சுரேஷ் குமார் இருந்தனர்.
News November 6, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


