News January 1, 2026
நடிகை நந்தினி மரணம்.. தாய் கண்ணீர் அஞ்சலி

நடிகை நந்தினியின் மரணம் சின்னத்திரை ரசிகர்களை உலுக்கியுள்ளது. குடும்ப அழுத்தமே அவரது சோக முடிவுக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், நந்தினியின் தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர்மல்க விளக்கம் அளித்துள்ளார். அதில், நந்தினி நடிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். மகளின் இறப்பு செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கியது எனவும் வேதனையுடன் அவர் கூறினார்.
Similar News
News January 22, 2026
சிலிர்க்க வைக்கும் கீழடி பெருமை

கீழடியின் பெரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன் மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர், இந்திய துனை கண்டத்திலேயே 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான். ஆனால், இதை யாரும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறினார். மேலும், கீழடி என்றாலே சிலர் நடுங்குவதாக பேசியுள்ளார்.
News January 22, 2026
ஜனவரி 22: வரலாற்றில் இன்று

*1901 – ராணி விக்டோரியா (1819-1901) காலமானார். *1947 – இந்திய அரசியலமைப்பின் வரைவு குறித்த தீர்மானத்தை அரசியலமைப்புச் சபை அங்கீகரித்தது. *1963 – டேராடூனில் ‘பார்வையற்றோருக்கான தேசிய நூலகம்’ நிறுவப்பட்டது. * 2001 – ஐஎன்எஸ் மும்பை என்ற ஏவுகணை தாங்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. *2009 – ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
News January 22, 2026
டிஜிட்டல் கைது என மிரட்டி ₹16 லட்சம் கொள்ளை

மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய மோசடி கும்பல், டெல்லி குண்டுவெடிப்பு நடத்தியவர்களுடன் அவருக்கு தொடர் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதியவர் வங்கி கணக்கிற்கு ₹7 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர், அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, அவரிடமிருந்து ₹16 லட்சம் பறித்துள்ளனர்.


