News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

<<19578782>>நடிகை சுபாஷினி<<>> தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3-ம் தேதி சென்னை வந்த அவர் ஷூட்டிங்கிற்காக போரூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு, பெங்களூருவில் உள்ள தனது கணவருடன் வீடியோ காலில் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனமுடைந்த சுபாஷினி, கணவருடன் பேசியபடியே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
Similar News
News April 10, 2026
Sports 360: இன்று களம்காண்கிறது RR vs RCB

➤KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றிக்கு வித்திட்ட 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ➤IPL: RR மற்றும் RCB இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன ➤டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக GT கேப்டன் சுப்மன் கில்லுக்கு ₹12 லட்சம் அபராதம் ➤ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்
News April 10, 2026
58 தொகுதிகளையும் டார்கெட் செய்த EPS

ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலினும், ஆட்சியை கைப்பற்ற இபிஎஸ்ஸும் தீவிரமாக பரப்புரை செய்கின்றனர். இந்நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் தனிச் சின்னங்களில் போட்டியிடும் 58 தொகுதிகளை EPS டார்கெட் செய்துள்ளாராம். திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் (காங்., விசிக) இணக்கம் இல்லாத நிலை, அதிருப்தி கூட்டணியில் கெமிஸ்ட்ரில் இல்லாதது ஆகிய சூழல்களை பயன்படுத்தி அத்தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறாராம்.
News April 10, 2026
காரைக்குடியில் பிரசாரம்.. தவெக அறிவுறுத்தல்

இன்று காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். வெயில் வெளுத்துவாங்கும் நண்பகல் 12 – 2.30 மணிக்குள் அவர் பிரசாரம் செய்யவுள்ளதால், சில முக்கிய அறிவுறுத்தல்களை தவெக வெளியிட்டுள்ளது. கர்ப்பிணிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாக பின்தொடரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


