News November 5, 2025

நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

image

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

Similar News

News November 6, 2025

ரஜினிக்கு கமல் எழுதிய லெட்டர்… மடல்… இல்ல கடுதாசி!

image

சினிமாவில் ரஜினியுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தி, ரஜினிக்கு கமல் X-ல் பதிவிட்டுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ‘அன்புடை ரஜினி, காற்றால் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

News November 6, 2025

ராசி பலன்கள்(06.11.2025)

image

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – பொறுமை ➤மிதுனம் – விவேகம் ➤கடகம் – வாழ்வு ➤சிம்மம் – தடங்கல் ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – தோல்வி ➤விருச்சிகம் – கவனம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – சுபம் ➤மீனம் – வெற்றி

News November 6, 2025

பழிவாங்குகிறதா பாம்பு? ஒரு மாதத்தில் 7 முறை கடி

image

தெலங்கானாவில் 28 வயதான இளைஞரை, ஒரு மாதத்தில் 7 முறை பாம்பு கடித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறை கடித்ததும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்த அந்நபர் வீட்டுக்கு திரும்பியதும், மீண்டும் மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதில் பீதியடைந்த அந்நபர், பாம்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணி புலம்பி வருகிறார். உண்மையில் சில வகை பாம்புகள் பழிவாங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!