News October 5, 2024

நடிகையை கத்தியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது

image

நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்த இருவரை, மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடிகை சோனா வீட்டில் புகுந்து ஏசி யூனிட்டை திருட மர்ம நபர்கள் 2 பேர் முயன்றபோது, சோனாவை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சிவா (23), லோகேஷ் (21) ஆகிய இருவரை சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 14, 2025

சென்னையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

image

கண்ணகி நகர் மயானம் அருகில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவர் நந்தகோபால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்ணகி நகரில் வசித்து வந்த இவர், நேற்று மாலை குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கினார். நீச்சல் தெரியாததே உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கண்ணகி நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் இன்று (செப்டம்பர் 14) காலை 6 மணி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கும், டீசல் ₹92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 14, 2025

சென்னை: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். வயது 41க்குள் இருக்க வேண்டும். ரூ.80,000 – ரூ.ரூ.91,200 சம்பளம் வழங்கப்படும். SHARE IT

error: Content is protected !!