News August 23, 2024
நடிகர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தவெக தலைவரும், நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடியில் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் உள்ளதாகவும், கட்சி கொடியில் உயிருள்ள விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது தேசக்குற்ற வழக்கு பதிவுசெய்ய கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் அகற்றும் சேவை நடைபெற்று வருகிறது. இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
News December 26, 2025
சென்னையில் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

1.பர்மா உணவுகள், வடா பாவ் (பாரிஸ் கார்னர்), 2. கெபாப், இப்தார் உணவுகள் (மண்ணடி), 3. பீப் கடாய் ரோஸ்ட் (தாஷ மக்கான் தெரு), 4. பன் பட்டர் ஜாம் (மவுண்ட் ரோடு), 5.சாட், சமோசா, ஜிலேபி (சௌகார்பேட்டை), 6.மீன் வருவல்கள், மரீனா பீச் (லூப் சாலை), 7.சாண்ட்விச், பிரட் ஓம்லெட்- ரெட் கிராஸ் ரோடு, எழும்பூர். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
மார்கழியில் மக்கள் இசை

சென்னை பச்சைபாஸ் கல்லூரியில் மார்கழியில் மக்கள் இசை திருவிழா நடைபெற்று வருகிறது. பறை இசைத்து விழாவை எம்.பி கனிமொழி துவக்கி வைத்தார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் இந்த இசை திருவிழாவில் இயக்குனர் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், g.v பிரகாஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த இசை திருவிழா டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10வரை நடைபெறும்.


