News October 27, 2024
நடிகர் விஜயினால் இபிஎஸ்க்கு தான் பாதிப்பு

கோவை ராமநாதபுரம் பகுதியில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜயினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் பாதிப்பு வரும் எனவும், அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும் எனவும், புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும், சசிகலா ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக செயல்பட வேண்டும் என்றார்.
Similar News
News January 23, 2026
கோவை மக்களுக்கு முக்கிய தகவல்

கோவை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News January 23, 2026
கோவை: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

கோவை மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 23, 2026
கோவை அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

கோவை தெலுங்குபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள்(56). தனியே வசித்து வந்தார். இவரது மகன் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர், தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


