News February 25, 2026

நடிகர் ரஜினி உருக்கமான இரங்கல்

image

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது என அவர் தனது X பதிவில் கூறியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றும், அவருடைய இழப்பால் வாடும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். #RIP நல்லகண்ணு

Similar News

News February 27, 2026

6 மணிநேரம் தான்.. வாட்ஸ் ஆப்பில் புதிய மாற்றம்

image

இந்தியாவில் வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். WhatsApp Web பயன்படுத்தும் போது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை அது தானாகவே Logout ஆகிவிடும். மீண்டும் பயன்படுத்துவதற்கு QR CODE மூலமாக Login செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி, இத்திட்டம் மார்ச் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

OPS அமைதிப்படை சத்யராஜ் போன்றவர்: RB உதயக்குமார்

image

திமுகவில் OPS-க்கு கிடைக்கும் பதவி, துரோகத்திற்காக கிடைத்த பரிசு என RB உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுகவின் பொய் வழக்கில்தான் ஜெயலலிதாவின் உயிர்போனதாக தெரிவித்த அவர், அந்த சமயத்தில், CM பதவிக்காக திமுகவின் உளவாளியாக OPS இருந்திருப்பாரோ என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், அமைதிப்படை சத்யராஜ் போல் OPS எங்கே யாருக்கு ஆப்பு வைப்பார் என யாருக்கும் தெரியாது எனவும் சாடியுள்ளார்.

News February 27, 2026

நகைக் கடன்.. மகிழ்ச்சியான செய்தி

image

நகைக் கடன் தேவைப்படுபவர்களுக்கு இந்தியன் வங்கி மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்குகிறது. இந்தியன் வங்கி மட்டுமே நகையின் மதிப்பில் 85% அளவுக்கு கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியாகும். இதனால், அதிக மக்கள் அந்த வங்கியின் கிளைகளில் நகைக் கடன் பெற்று வருகின்றனர். மேலும், விவசாய நகைக் கடன்களுக்கு 7% மட்டுமே வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்தியன் வங்கியில் நகைக் கடன் வாங்கி உள்ளீர்கள்?

error: Content is protected !!