News December 12, 2025

நடிகர் ரஜினியின் சொத்து இவ்வளவு கோடியா..!

image

தமிழ் திரையுலகின் உச்சம் ரஜினிகாந்த், பார்க்கத்தான் சிம்பிள். ஆனால், அவரே சொன்னது போல, ‘இருக்குறது போயஸ் கார்டன்ல, போறது BMW கார்ல, சாப்பிடறது ITC ஹோட்டல்ல’ என ஆடம்பர வாழ்க்கையையே வாழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ₹430 கோடியை தாண்டியிருக்கும் என Mint செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.

Similar News

News March 9, 2026

₹30 லட்சம் கோடி காலி.. கலங்கும் முதலீட்டாளர்கள்!

image

வாரத்தின் முதலில் நாளிலேயே பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,271 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சுமார் ₹30 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. போர் பதற்றம், சர்வதேச சந்தைகளின் சரிவு உள்ளிட்டவை சரிவுக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக IndiGo பங்குகள் 8% அளவுக்கு சரிவை சந்தித்தது.

News March 9, 2026

ராஜ்யசபாவுக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வு

image

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். திமுகவில் இருந்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா MP-க்களாக தேர்வாகியுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

News March 9, 2026

லோகோ போட்டி.. ₹50,000 பரிசு அறிவித்த மத்திய அரசு

image

VB-G RAM G திட்டத்துக்கு புதிய லோகோவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு போட்டியை அறிவித்துள்ள கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த லோகோவுக்கு ₹50,000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடியுடன் <>mygov.in<<>> தளத்தில் லாக்இன் செய்ய வேண்டும். போட்டிக்கான கடைசி தேதி மார்ச் 20. SHARE IT.

error: Content is protected !!