News March 30, 2026

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் மறைவு: குவியும் இரங்கல்

image

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் <<19513252>>ஸ்வர்ணலதா(86)<<>> மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்வர்ணலதா, பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 நாள்களுக்கு முன்னர், தனது தாயாருடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரகாஷ் ராஜ், தற்போது மீள முடியாத துயரில் ஆழ்ந்துள்ளதாக அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க கூறினர். #RIP

Similar News

News April 7, 2026

கோவையில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணு

News April 7, 2026

காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு புது சிக்கல்!

image

2021 தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவுக்கு கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் போட்டியிடும் காரைக்குடியில், இந்திய குடியரசு கட்சியின் கருப்பையாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்களர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம்.

News April 7, 2026

BREAKING: மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?

image

ஈரானுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்ததால் போர் பதற்றம் மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் LGP சிலிண்டர் தட்டுபாடு இல்லை எனவும், பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் 6,500 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!