News August 18, 2024
நடிகர் கிங்காங்கின் தாயார் காலமானார்

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கிங்காங்கின் தாயார் காசியம்மாள்(72) இன்று காலமானார். நள்ளிரவில் தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்ற நிலையில், சுமார் 12.30 மணி அளவில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கிங் காங், பலவேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தாயாரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 31, 2025
தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 4ம் தேதி இரவு 9.37 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 7.20 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்லும் நிலையில், 4ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்ததாகும் என திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 31, 2025
தி.மலை: சீட்டு கட்டுபவர்கள் நோட் பண்ணிக்கோங்க!

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


