News January 22, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. குவியும் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிர்துணையாக இருந்த அவரது சகோதரர் கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற தமிழ் படம் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் மலையாளத்தில் ‘தி கிங் மேக்கர்’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இயக்குநர் வினயன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
காமராஜர் பொன்மொழிகள்!

*பணம் இருந்தால்தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை *எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை *நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான் *சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும், உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது
News February 2, 2026
புறக்கணித்த பாகிஸ்தான்.. இதுவே இந்தியாவின் முடிவு

டி20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், ஐசிசி விதிகளின்படி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இலங்கைக்கு இந்திய அணி பயணிக்க வேண்டும். போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ளுதல், பத்திரிகையாளர் சந்திப்பு என அனைத்தும் நடக்கும். ஆனால் போட்டி ரத்து என நடுவர் அறிவிக்கும் வரை இந்தியா காக்க வேண்டும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
News February 2, 2026
போர் வெடிக்கும்.. டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை அனுப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய போராக மாறும் என சுப்ரீம் லீடர் கொமேனி எச்சரித்துள்ளார். தாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளார். மேலும், ஈரானின் எண்ணெய் & இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற அமெரிக்கா முயல்வதாகவும் சாடியுள்ளார்.


