News January 21, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் சகோதரரும் நடிகருமான <<18917555>>கமல் ராய்<<>> இன்று காலமானார். சென்னையில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரை அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமாதான். கமல் ராயின் மறைவு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு மலையாள இயக்குநர் வினயன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கமல் ராயின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. RIP
Similar News
News January 24, 2026
இலை துளிர்த்து தாமரை மலரும்: அண்ணாமலை

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.
News January 24, 2026
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.
News January 24, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 24, தை 10 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


