News August 27, 2024
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்கி வைப்பு

சேலம் மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையினை கலெக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார்கள். உடன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News July 7, 2025
சேலத்தில் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தொகை ரூபாய் 33.07 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
சேலம் மாநகர காவல்துறை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 06) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 6, 2025
தடகளத்தில் தங்கம் வென்ற சேலம் காவலர்!

அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.