News December 7, 2024

நடமாடும் எக்ஸ்ரே வாகனம்: கலெக்டர் துவங்கி வைப்பு 

image

நீலகிரி மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று அதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் கொடி அசைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அப்போது அருகில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Similar News

News March 3, 2026

கூடலூர் தொகுதியில் வேட்பாளர் இவரா ?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூடலூர் தொகுதியில் போட்டியிட கூடலூர் நகரமன்றத் தலைவர் ச.பரிமளா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் போட்டியிட திமுகவின் ராஜேந்திரனும் விருப்பமனு அளித்துள்ளதால், வேட்பாளர் தேர்விலேயே இப்போதே கூடலூர் தேர்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

News March 3, 2026

நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் தலைமை தபால் நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (E-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News March 3, 2026

குன்னூர் மக்களுக்கு வந்த சோதனை!

image

குன்னூர் வண்டிப்பேட்டை அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதானதால், காலை உணவாக இட்லி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் சேதமடைந்தும், உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளதாலும் பொங்கல் மற்றும் கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் வருகை குறைந்துள்ள நிலையில், இயந்திரத்தைச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!