News January 13, 2026
நடப்பு ஐபிஎல் சாம்பியனுக்கு வந்த சோதனை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களால் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் RCB அணியின் Home Game-கள் நவிமும்பை (5 போட்டி), ராய்ப்பூருக்கு ( 2 போட்டி) மாற்றப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Similar News
News January 23, 2026
இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <
News January 23, 2026
பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்த <<18932257>>தீர்மானம்<<>> நிறைவேறியது. தீர்மானத்தை CM முன்மொழியும்போது, திமுக ஏதோவொரு தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதை செய்வதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், PM மோடியை சந்திக்கும் EPS இத்தீர்மானம் பற்றி எடுத்துச் சொல்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
நெகிழ வைக்கும் 5 வயது சிறுமியின் போட்டோ!

சட்டவிரோதமான குடியேற்றத்திற்கு எதிராக USA அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மின்னசோட்டா மாகாணத்தில், அதிகாரிகளால் 5 வயது சிறுமி ஒருவரும் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல், அக்குழந்தை அழுதபடியே நின்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. பள்ளியில் இருந்தே அச்சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.


