News April 25, 2024
நடபாவி கிணற்றில் தோன்றிய காஞ்சி வரதர்

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்காரகுளம் பகுதியில் பாலாற்றின் கரையில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட நீராவி நடபாவி ஆழ் கிணற்றில் நேற்று(ஏப்.23) சித்திரை மாதம் பௌர்ணமியை ஒட்டி, ஒரு நாள் காஞ்சி வரதராஜர் பெருமாள் பூதேவி ஶ்ரீதேவி உடன் நடபாவி கிணற்றில் எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News October 19, 2025
காஞ்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<
News October 19, 2025
காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய எட்டு அறிவுரைகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்சாரம் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
காஞ்சிபுரம்: பைக் திருடிய 3 பேர் கைது

உத்திரமேரூரில் பைக்குகளைத் திருடிய 3 வாலிபர்களை சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர். நேற்று ரோந்து பணியின் போது எம்.மாம்பாக்கத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட குருமஞ்சேரி சந்தோஷ் (22) என்பவரிடம் விசாரித்ததில், அவர் உத்திரமேரூர், வாலாஜாபாத், அரும்புலியூர் ஆகிய இடங்களில் 2நண்பர்களான மதன் (20), பிரசாந்த் (22) ஆகியோருடன் சேர்ந்து 3 பைக்குகளைத் திருடியது தெரியவந்தது.இதையடுத்து, 3பேரையும் கைது செய்தனர்.