News April 18, 2025

நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி

image

போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். உரிய நிவாரணம் வழங்க கோரி ராசிங்காபுரம் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News April 19, 2025

தேனி மக்களுக்கு சூப்பர் APP

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை, மருத்துவ உதவி உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 19, 2025

கத்தியை காட்டி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது

image

தேனி, பெரியகுளத்தை சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூவரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.போலீசார் வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து அலைபேசியை கைப்பற்றினார்.

News April 18, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!