News April 27, 2025

நசியனுரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

image

நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணைதேவை என, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த திண்டுக்கல சேர்ந்த மனோஜ்குமார் 29 விண்ணப்பிக்க, இருவரும் பேசி பழகி உள்ளனர். பின் அந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடி சென்றான், அந்த பெண்மணி சித்தோடு போலீஸில் புகார் அளிக்க அந்த வாலிபரை கைது செய்த போலிஸார் கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News

News July 7, 2025

கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

image

ஈரோடு வீரப்பன் சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் தமிழ்ச்செல்வன் (31), இவரது வீட்டின் அருகில் தனியாக இருந்த மாணவியை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News July 7, 2025

ஈரோடு அருகே தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

image

ஈரோடு, முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவன் 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று போதையில் நடந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டதில், ஆண்டவன் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 6, 2025

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு ,கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!