News March 22, 2025

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு ஏப்.15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 24-ம் தேதி முதல் வரும் ஏப்.13 வரை வழங்கப்படும். பயிற்சி குறித்த விவரங்களுக்கு 04546-244465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2025

தேனியில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு , பொறியியல் படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து 30-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

image

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 09) கத்தரி ரூ.24/20, தக்காளி ரூ.18-15, வெண்டை ரூ.34/30, கொத்தவரை ரூ.20, சுரை ரூ.08-06, புடலை ரூ.28, பாகல் ரூ.35, பீர்க்கை ரூ.35/25, பூசணி ரூ.14-08, மிளகாய் ரூ.30-25, அவரை ரூ.60/50, உருளை ரூ.30, கருணை ரூ.78, சேனை ரூ.55, உள்ளி ரூ.40-35, பல்லாரி ரூ.28, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.22/20, பீன்ஸ் ரூ.65, கோஸ் ரூ.15, கேரட் ரூ.26/20, சவ்சவ் ரூ.24 க்கு விற்கப்படுகிறது.

News April 9, 2025

வேளாண் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த 2015.ம் ஆண்டு தேனி மாவட்ட வேளாண்மைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் சரவணக்குமாா் தீா்ப்பளித்தாா்.

error: Content is protected !!