News February 28, 2025
நகை திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

காரியாபட்டியில் கடந்த பிப்., 4ல் எலக்ட்ரீசியன் சுப்புராஜ் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 30 பவுன் நகை திருடப்பட்டது. இவ்வழக்கை காரியாபட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கணேசனை 39, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கூட்டாளியான வ.புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமாரை நேற்று காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 21, 2025
விருதுநகர்: கோடையில் தவிர்க்க வேண்டிய ஆடைகள்

▶️செயற்கையான நூலிழைகளால் ஆன ஆடைகள் (Synthetic Fabrics)
▶️இறுக்கமான ஆடைகள் (Tight-Fitting Clothes)
▶️அடர் நிற ஆடைகள் (Dark-Colored Clothes)
▶️கனரக துணிகள் (Heavy Fabrics)
▶️ஃபிளிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops)
இந்த மாதிரியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் எரிச்சலையும் உண்டாக்குகிறது. *ஷேர் பண்ணுங்க*
News April 21, 2025
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருச்சுழி அருகே K.மீனாட்சிபுரம் கிராமத்தில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வசந்த பாலமுருகன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 21, 2025
விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.