News January 6, 2026

நகைச்சுவை நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

காமெடி நடிகர் வெங்கட்ராஜ், நுரையீரல் பிரச்னையால் ஜன.4-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ‘லொள்ளு சபா’ குழுவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஈஸ்டர், வெங்கட்ராஜுடன் எடுத்த போட்டோக்களை SM பக்கத்தில் பகிர்ந்து, Rest in peace என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து, வெங்கட்ராஜின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்களும் பாருங்க!

Similar News

News February 2, 2026

பங்குச் சந்தையில் ஒரே நாளில் ₹10 லட்சம் கோடி இழப்பு

image

மத்திய பட்ஜெட் தாக்கலால் விடுமுறை நாளான நேற்றும் பங்குச் சந்தைகள் இயங்கின. ஆனால், முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாததால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தன. இதனால், நேற்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ₹10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர். வரி விலக்கு அறிவிப்பால் சில மருந்து நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஏற்றமடைந்துள்ளன.

News February 2, 2026

BREAKING: திருப்பரங்குன்றம் வழக்கு.. மன்னிப்பு கேட்டார்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முன்னேற்பாடுகளை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜரான மதுரை கலெக்டர், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் வந்ததாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு: செல்லூர் ராஜு

image

அதிமுக குறித்து செங்கோட்டையன் வைக்கும் விமர்சனங்களுக்கு செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு என விமர்சித்த அவர், வேறு யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அவர் தவெகவில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதிமுக தொண்டரின் வியர்வையில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு வெளியேறியவர்களை பற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!