News March 27, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.
Similar News
News April 1, 2026
மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்: EPS

TN-ல் எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் புழக்கமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சாக்லேட், திரவ வடிவத்தில் கிடைக்கும் கஞ்சாவை பயன்படுத்தி பள்ளி & கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டதாக குறிப்பிட்ட EPS, இதற்கு காரணமான திமுக அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார். <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
மேடையில் கண் கலங்கினார் ஆதவ் அர்ஜூனா

சாதியின் காரணமாக தனது அம்மா தற்கொலை செய்துகொண்டதாக ஆதவ் அர்ஜூனா வேதனை தெரிவித்தார். கட்டாயத்தின் பேரில் சாதிய கட்டமைப்புக்குள் திருமணம் செய்து அவர் வாழ்ந்ததாகவும், அதன்பிறகு கடன் சுமை தாங்க முடியாமல் தன் கண் முன்னே உயிரைவிட்டதாகவும் ஆதவ் பிரசார மேடையில் கண் கலங்கினார். பிற்காலத்தில் அம்பேத்கர், பெரியாரை படித்து ஏன் சாதியை ஒழிக்கவேண்டும் என புரிந்துகொண்டு அரசியல் பாதையை தேர்வு செய்ததாக கூறினார்.
News April 1, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி இன்று தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கெல்லாம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


