News March 1, 2026

நகைக் கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி வந்தது

image

கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை திமுக, அதிமுக கட்சிகள் அளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த முறையைப் போல் 5 சவரன் தங்க நகைக் கடன்கள் மட்டும் தள்ளுபடி, வருமான வரி செலுத்துவோர், அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Similar News

News March 1, 2026

தங்கம், வெள்ளி விலை.. தலைகீழாக மாறியது

image

ஈரான் – US போர் பதற்றம் தொடரும் நிலையில், விடுமுறை நாளான இன்றும் வரலாறு காணாத வகையில் தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹325-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து வெள்ளி விலை ஷாக் கொடுத்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 1, 2026

148 மாணவிகள் கொல்லப்பட்டனர்.. PHOTOS

image

இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் <<19264222>>பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி ஒன்று வெடித்து சிதறியது<<>>. இந்நிலையில், கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் இச்சம்பவத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பாவி சிறுமிகளை கொன்றதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

News March 1, 2026

அனைவருக்கும் ஏன் ஒரே மாதிரியான ரத்த வகை இல்லை

image

சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் உள்ள ஆன்டிஜென்களின் அடிப்படையில் ரத்த வகைகள் A, B, AB, O என பிரிக்கப்படுகின்றன. இந்த ரத்த வகை மரபணுக்களின் மூலம் பெற்றோரிடமிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு மரபணு கலவையை பெறுவதால், சகோதரர்களுக்கு வெவ்வேறு ரத்த வகைகளை உள்ளன. ஆனால் ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே மரபணுக்களைக் கொண்டிருப்பதால், ரத்த வகையும் ஒரே மாதிரியாக உள்ளன.

error: Content is protected !!