News January 29, 2026

நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை TN அரசு தயார் செய்து வருகிறதாம். மேலும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News February 4, 2026

BREAKING: தங்கம், வெள்ளி.. விலை விண்ணை முட்டியது

image

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹320-க்கும், 1 கிலோ ₹20,000 அதிகரித்து ₹3.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ₹1.45 லட்சம் வரை குறைந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ₹40,000 உயர்ந்துள்ளது. நகைப் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 4, 2026

விஜய்க்கு கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லை: ஜெயக்குமார்

image

கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்​கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சி விழாவில் விஜய் டான்ஸ் ஆடுகிறார் என்ற அவர், அந்த 41 குடும்​பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்​படு​வார்கள் என்பதை விஜய் நினைத்துப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்​கி​றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 4, 2026

ஆன்லைன் கேமிங் கொடூரம்.. 3 சிறுமிகள் தற்கொலை!

image

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உ.பி.,யின் காசியாபாத்தை சேர்ந்த 3 சகோதரிகளும் கொரோனா காலக்கட்டம் முதலே ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பை புறக்கணித்த மூவரையும் தொடர்ந்து பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த மூவரும், அபார்ட்மெண்ட்டின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

error: Content is protected !!