News January 10, 2026
நகைக்கடைகளில் ஹிஜாப், புர்கா அணிய தடை

பிஹாரில் நகைக்கடைகளில் மாஸ்க் அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு புர்கா, ஹிஜாப், ஸ்கார்ப், மாஸ்க், ஹெல்மெட் அணிந்தபடி நகைக்கடைக்குள் ஆடவர், மகளிர் நுழைய அனுமதி இல்லை என அங்குள்ள நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஹிஜாப், புர்காவுக்கு தடைவிதித்தது இந்தியாவின் மத சுதந்திரத்துக்கு எதிரானது என சாடியுள்ளன.
Similar News
News February 4, 2026
BREAKING: தங்கம், வெள்ளி.. விலை விண்ணை முட்டியது

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹320-க்கும், 1 கிலோ ₹20,000 அதிகரித்து ₹3.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ₹1.45 லட்சம் வரை குறைந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ₹40,000 உயர்ந்துள்ளது. நகைப் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 4, 2026
விஜய்க்கு கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லை: ஜெயக்குமார்

கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சி விழாவில் விஜய் டான்ஸ் ஆடுகிறார் என்ற அவர், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்படுவார்கள் என்பதை விஜய் நினைத்துப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 4, 2026
ஆன்லைன் கேமிங் கொடூரம்.. 3 சிறுமிகள் தற்கொலை!

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உ.பி.,யின் காசியாபாத்தை சேர்ந்த 3 சகோதரிகளும் கொரோனா காலக்கட்டம் முதலே ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பை புறக்கணித்த மூவரையும் தொடர்ந்து பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த மூவரும், அபார்ட்மெண்ட்டின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


