News March 20, 2026

நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு பேசிய EPS கூறியுள்ளார். திமுகவும் ஓரிரு நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 5 சவரன்(40 கிராம்) வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.

Similar News

News March 29, 2026

என் கணவர் கொலைக்கு நீதி கிடைக்கணும்: பொற்கொடி

image

திரு.வி.க நகரில் வேட்பாளராக <<19504859>>அறிவிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி<<>> EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல்முறையாக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தனது கணவர் கொலைக்கு நீதி கிடைக்க இந்த தேர்தல் தனக்கு மிக முக்கியம்; திரு.வி.க நகரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.<<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

தவெக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

லால்குடி – கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு – சத்யபாமா, ஆயிரம் விளக்கு – ஜெ.சி.டி.பிரபாகர், மயிலாப்பூர்-வெங்கட்ராமன் ஆர்.கே.நகர்-மரிய வில்சன், பொன்னேரி-எம்.எஸ்.ரவி, மதுரவாயல்-ரேவந்த் சரண், அம்பத்தூர்-பாலமுருகன், மாதவரம்-விஜய பிரபு, திருவிக நகர்-பல்லவி, ராயபுரம்-விஜயதாமு, துறைமுகம்-அசோக், சேப்பாக்கம்-செல்வம், வேளச்சேரி-ஆர்.குமார் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

BREAKING: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

image

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் CTR நிர்மல்குமார், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ், சேப்பாக்கத்தில் செல்வம், EPS-ன் எடப்பாடி தொகுதியில் அருண்குமார், ஸ்டாலினின் கொளத்தூரில் VS பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!