News March 14, 2025
நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு

அறந்தாங்கி, LNபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் மார்ச் 27ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார துறை அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க…
Similar News
News November 7, 2025
புதுகை: நாயால் பறிபோன உயிர்

மீமிசலிலிருந்து செய்யானத்திற்கு நேற்று ஜான் பீட்டர் மற்றும் அவரது மனைவி நிர்மலா(48) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மெய்யானம் மறவர் குடியிருப்பு சாலையில் நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிர்மலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
புதுகை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 7, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு!

புதுகை மாவட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


