News February 27, 2026
நகராட்சி சேர்மன் டூ CM.. OPS கடந்து வந்த பாதை!

1996-ல் பெரியகுளம் நகராட்சி சேர்மனாக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய OPS, 2001-ல் முதல்முறையாக பெரியகுளத்தில் MLA ஆனார். அப்போதே வருவாய், பொதுப்பணித்துறைகளுக்கு அமைச்சரானார். பின்னர், 2001 செப்டம்பரில் முதல்முறையாக ஜெயலலிதாவால் CM நாற்காலியில் அமர்ந்தார். 2006-ல் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு MLA, 2011-ல் போடி தொகுதியில் வென்ற அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பும் வந்து சேர்ந்தது.
Similar News
News March 10, 2026
கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ₹1,500-க்கு விற்பனை!

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்தியாவில் LPG சிலிண்டர்களுக்கான தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் சில இடங்களில் முன்கூட்டியே சிலிண்டரை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சந்தையில் சிலிண்டரின் விலை அதிகபட்சமாக ₹1,500-ஐ எட்டியுள்ளது. போர் காரணமாக மார்ச் 7-ம் தேதி வீட்டு சிலிண்டர்களின் விலையில் ₹60-ஐ ஏற்கனவே மத்திய அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
அப்படி கூற நா கூசவில்லையா? நயினார்

தமிழகத்தை பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுக அரசை சும்மாவிடாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொன்று, அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்துள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்றும், தினமும் பெண்கள் நரக வேதனை அனுபவிக்கும் நிலையில், வெல்லும் தமிழ் பெண்கள் என்று கூற நாகூசவில்லையா CM ஸ்டாலின் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 10, 2026
விஜய் மகனின் புதிய போட்டோ

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பி வருகிறது. சங்கீதா மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களது போட்டோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் தொழிலாளர்களுடன் ஜேசன் சஞ்சய் எடுத்த போட்டோ தற்போது வெளியாகி SM-ல் வைரலாகி வருகிறது. இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.


