News June 14, 2024
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் நேற்று (ஜூன்.13) தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள் தங்களுக்கு காலதாமதமின்றி மாத ஊதியம், பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
Similar News
News March 1, 2026
தேனி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

தேனி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
தேனி: முன்விரோதத்தால் அரிவாள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு

மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் செந்தூரப்பாண்டி. இவருக்கும் இவரது தாய்மாமனான முருகன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து செந்தூரப்பாண்டியை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சின்னமனூர் போலீசார் நேற்றூ வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 28, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 28.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


