News March 30, 2025

நகராட்சியாக உதயமாகிய கன்னியாகுமரி

image

கன்னியாகுமரியை புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Similar News

News April 1, 2025

குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு: எஸ்பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைவாகும் என்று கூறியுள்ளார்.

News April 1, 2025

கோடையில் கால்நடைகளை பாதுகாக்க ஆட்சியர் அறிவுரை

image

கோடை காலத்தையொட்டி கால்நடைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்தியில்; கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் நிழல் தரும் கூரையின் அடியிலோ அல்லது மர நிழலிலோ கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்டி வெளியில் போடக்கூடாது.முற்றிலும் அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை – எஸ்.பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருவதாக எஸ்.பி. ஸ்டாலின் இன்று (ஏப்.01) தெரிவித்தார். விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம் என்ற காவல்துறையின் குறிக்கோளை அடைய காவல்துறை எடுக்கும் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!