News February 2, 2026
தோல்வி பயத்தில் ஸ்டாலின்: நயினார்

தோல்வி பயத்தில் இருக்கும் <<19023321>>ஸ்டாலின் <<>>அவர்களே, மாநிலத்திற்கு பட்ஜெட் போடச் சொல்லி 5 வருட ஆட்சியை வழங்கிய மக்களுக்கு, நீங்கள் அல்வா கிண்டிக் கொடுத்த கரண்டி அடிப்பிடித்துக் கிடக்கிறது என நயினார் பதிலடி கொடுத்துள்ளார். கவர்ச்சிகர அறிவிப்பு மூலம் ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் உங்களுடையது(திமுக); அது NDA அரசின் பாணி அல்ல எனக் குறிப்பிட்ட அவர், வாழ்க தமிழ்! ஒழிக திமுக! என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2026
அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000.. யாருக்கு கிடைக்கும்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், ₹10,000 உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று EPS கூறியுள்ளார். ஆண்டுதோறும் வழங்கப்படாது என்றும் கூறினார். எதன் அடிப்படையில் கிடைக்கும் என தெரிவிக்காததால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்குமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
News February 25, 2026
நடிகர் ரஜினி உருக்கமான இரங்கல்

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது என அவர் தனது X பதிவில் கூறியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றும், அவருடைய இழப்பால் வாடும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். #RIP நல்லகண்ணு
News February 25, 2026
ராஜ்யசபா MP சீட் கேட்கவில்லை: TTV தினகரன்

NDA கூட்டணியில் சுமுகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என TTV தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை. அதேபோன்று அதிமுகவிடம் ராஜ்யசபா MP பதவியையும் தான் கோரவில்லை என கூறியுள்ளார். பாஜகவின் வழிகாட்டுதலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி கெளரவமான தொகுதிகளில் தகுதியான அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவர் என அறிவித்துள்ளார்.


