News December 4, 2025
தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
Similar News
News December 5, 2025
சிந்தனையை தூண்டும் PHOTOS

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை, எப்படி நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்ற அடிப்படையில்தான் உங்கள் சிந்தனை வடிவமைக்கப்படுகிறது. உண்மையான வளர்ச்சி என்பது என்னவென்று சில புகைப்படங்கள் நம் சிந்தனையை தூண்டுகின்றன. அவற்றை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அனைவரையும் சிந்திக்க தூண்டும் இந்த போட்டோக்களை SHARE பண்ணுங்க.
News December 5, 2025
புதிய தொழிலாளர் சட்டம்.. எப்போது அமல் தெரியுமா?

அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்காக 4 தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு, சிறந்த சலுகைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அரசு கூறுகிறது. ‘சம வேலைக்கு சம’ ஊதியம் என்ற விதியால் ஆண்களும், பெண்களும் ஒரே ஊதியம் பெறுவார்கள்.
News December 5, 2025
சீஹாக் ஹெலிகாப்டர்.. ₹7,995 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம்

24MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கான நிலைத்தன்மை தொகுப்பில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 946 பில்லியன் டாலர் (₹7,995 கோடி) தொகுப்பின் மூலம், இந்திய கடற்படையின் கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும். இதில், உதிரிபாகங்கள், துணை உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவையும் அடங்கும். இது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


