News March 12, 2025
தோப்பூர் அருகே சாலை விபத்தில் பெண் பலி

கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சராபாளையம் செல்லும் சாலையில் கடத்தூர் ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிபாரதி மாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் தனியார் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Similar News
News March 12, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி உதவித்தொகை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை குறித்தான கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
News March 12, 2025
Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
News March 12, 2025
இரு பெண் குழந்தைகள் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு, தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்ச வரம்பு, ரூ.1.20 லட்சமாக, உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, வருமான சான்று, மற்றும் இரண்டாவது பெண் குழந்தை 3 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.