News December 1, 2025

தோனி.. தோனி.. ராஞ்சியில் Mahi Effect

image

ராஞ்சியில் நடந்த IND Vs SA 50 ஓவர் போட்டியை பார்க்க தோனி வரவில்லை என்றாலும், தொடக்கம் முதல் இறுதிவரை மைதானத்தில் MSD மயமாகவே இருந்தது. தோனி பற்றிய ரவி சாஸ்திரியின் வர்ணனை, சதம் விளாசிய கோலி MSD பெவிலியன் திசையில் பேட்டை உயர்த்தி கர்ஜித்தது, ருதுராஜின் துல்லியமான கேட்ச் என அனைத்திலும் Mahi Effect இருந்ததாக போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் பூரித்து பேசியுள்ளனர். Thala for a Reason-னா சும்மாவா!

Similar News

News December 1, 2025

ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

image

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 1, 2025

BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

News December 1, 2025

மதிமுக கூட்டணி மாற வாய்ப்பு: மல்லை சத்யா

image

திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனையாகத்தான் எப்போதும் இருப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுகவுடன் பேச்சுவார்தை நடத்தியதை எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், துரைவைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!